கிரிக்கெட்
குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது குலிபையர் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத் அணியின் தொடக்க சஹா 18 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சனுடன், இணைந்த சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
குஜராத் 233 ரன்கள்
சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 129 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்சன் 43 ரன்களை எடுத்தார். முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, நேஹல் வதேரா களமிறங்கினர். வதேரா 4 ரன்களும், ரோகித் சர்மா 8 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த அதிரடியாக விளையாடி திலக் வர்மா 43 ரன்களும், கமரூன் கிரீன் 30 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் 61 ரன்களை எடுத்தார்.
ஆனால், அடுத்து வந்த விஷ்னு வினோத் 5 ரன்களும், டிம் டேவிட் 2 ரன்களும், ஜோர்டன் 2 ரன்களும், சாவ்லா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
குஜராத் வெற்றி
முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 171 ரன்களை எடுத்து, மும்பை இந்தியன்சை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றியைப் பெற்றது. சிறப்பாக பந்து வீசிய மோஹித் சர்மா 2.2 ஓவரில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது. நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.