Connect with us

கிரிக்கெட்

10வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை: 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

Published

on

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடவக்க ஆட்டக்காரர்களான கான்வேயும், கெய்க்வாட்டும் சிறப்பான ஆடினர். அரைசதம் அடித்த கெய்க்வாட் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே மற்றும் ரகானே அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சென்னை 172 ரன்கள்

கான்வே 40 ரன்களில் வெளியேற, தல தோனியும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், நலகண்டே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சென்னை வெற்றி

173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் சஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா 8 ரன்களும், தசுன் ஷனகா 17 ரன்களும் மற்றும் டேவிட் மில்லர் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திவாட்டியா 3 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 14 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த நல்கண்டே வந்த வேகத்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் தனி நபராக போராடிய ரஷித் கான் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் தீக்சனா, தீபக் சாஹர், ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகளும் தேஷ்பாண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
.forums questions answers.. Find and apply for government jobs online through jobz blog, pakistan’s premier job search platform. Candidates will be selected for the interview round based on the marks obtained in paper i, paper ii, and paper iii of the mains exam.