கிரிக்கெட்
உலக கோப்பை 2023: அக்டோபர் 15-ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்!

ஆடவர் உலக கோப்பை போட்டிகள், நடப்பாண்டில் அக்டோபர் மாதமனத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை – 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் 50 ஓவர் உலக கோப்பைத் தொடர் தொடர்பான உத்தேசப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையே முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.
நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பைத் தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. உலக கோப்பை சாம்பியன்ஷிப்பிற்கான இந்த யுத்தத்தில் எந்த அணி வெல்லும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா – பாகிஸ்தான்
உலக கோப்பைத் தொடருக்கான இந்திய ஆடவர் அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பகளை ஏற்படுத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம், அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. மேலும், நவம்பர் 19ஆம் தேதி மோட்டராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டியானது நடக்க உள்ளது. நடப்பு உலக கோப்பை போட்டியில் வெற்றியை எட்டப் போவது எந்த அணி என்று ரசிகர்கள் இடையே அதிக ஆர்வம் இப்போதே எழுந்துள்ளது.