செய்திகள்
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஹீலர் பாஸ்கர்.. போலீசிடம் தகராறு

சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர், ஜெயலில் போலீசிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்.
போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்த பயிற்சி பற்றி விசாரணை நடந்து வருகிறது.
யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பரிதாபமாக பலியானார். இதையடுத்து இரண்டு நாள் முன்பு ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஹீலர் பாஸ்கர்
இது பெரிய அளவில் வைரல் ஆனது. இதையடுத்து தமிழக காவல் துறை அவரை கைது செய்தது. இந்த நிலையில் ஹீலர் பாஸ்கர் ஜெயலில் போலீசிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்.
உயரிய அதிகாரிகள் உடன் மட்டுமே பேசுவேன் என்று அவர் கூறியுள்ளார். டிஐஜி, ஏசி வந்தால் மட்டுமே பேசுவேன் என்று தகராறு செய்து வருகிறார்.





















