Connect with us

தமிழ்நாடு

முதுகெலும்பு இல்லாத நத்தை: கமலை மீண்டும் சீண்டும் எச்.ராஜா!

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் டுவிட்டரில் சீண்டியுள்ளார். அவரை முதுகெலும்பு இல்லாத நத்தை என விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் நேற்று ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து டார்ச் லைட் சின்னம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கமல், நோட்டாவால் காணாமல் போன பாஜகவை பேட்டரி டார்ச் வைத்து தேடப் போவதாக கூறி டார்ச் லைட்டும் அடித்தும் பதிலளித்தார். மேலும் நோட்டா சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கினால் சரியாக இருக்கும் என்று அவர் நக்கலடித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் வன்மையாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

அதில், விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்த போது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுக்களை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரை தேட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது அநாகரிகமான மிரட்டல் என திராவிடர் கழக சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?