தமிழ்நாடு
சீமான் அம்மா மலையாளி, சுபவீரபாண்டியன் பிச்சைக்காரன்: எச்.ராசாவின் பரபரப்பு பேட்டி

சீமானின் அம்மா மலையாளி என்றும் சுபவீரபாண்டியன் அறிவாலயத்தில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் என்றும் பத்திரிக்கையாளர்களை பிரஸ்ட்டியூட் என்றும் ஆவேசமாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று எச் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தமிழர்களையும் இந்துக்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது என்றும், இந்துக்கள் தான் தமிழர்கள் என்றும் தமிழர்கள்தான் இந்துக்கள் என்றும் கூறினார்.
மேலும் ஆரியர்கள் படையெடுப்பு என்று பொய்யான கருத்துக்களை சுப வீரபாண்டியன் போன்ற ஒருசில தெரிவித்து வருகின்றார்கள் என்றும், சுபவீரபாண்டியன் அறிவாலயத்தில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் என்றும் கூறினார்.
மேலும் தமிழர்கள் குறித்து பேசி வரும் சீமானின் அம்மா மலையாளி என்றும் அவர் சுத்தமான தமிழர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வரும் பத்திரிக்கையாளர்களை பிரஸ்ட்டியூட் என்றும் கடுமையாக விமர்சித்த எச் ராஜா பொய்யான கருத்துக்களை தயவு செய்து ஆதரித்து பத்திரிகைகளில் வெளி விடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்துக்களும் தமிழும் வெவ்வேறு என்று சொன்னது யார்? என்று கேள்வி எழுப்பிய எச் ராஜா இந்துக்கள் இல்லாமல் தமிழ் எங்கே வந்தது என்றும், தமிழ் வேற இந்து வேற என்று பேசக்கூடிய அளவுக்கு வேண்டுமென்றே மதமாற்றத்திற்கு துணைபோக வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும் சில முட்டாள்கள் என்னை பீகாரி என்று கூறுகின்றார்கள் நான் பச்சை தஞ்சாவூர்காரன் என்றும் அவர் தெரிவித்தார்.
https://twitter.com/abpnadu/status/1442728969267146758
















