தமிழ்நாடு
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு: கனமழைக்கு வாய்ப்பு!

வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஏனைய மாவட்டங்களிலும் மேற்குதொடர்ச்சி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


















