இந்தியா
மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லையா? கூகுளின் புதிய வசதி!

மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லை என்றால் அதற்கு கூகுள் நிறுவனம் AI என்ற நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புரிய வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவில் நடைபெற்ற கூகுள் AI இந்தியா என்ற நிகழ்வின் போது இந்த அம்சம் காட்சிப்படுத்தப்பட்டது.
மருத்துவர்கள் சில சமயம் புரியாத வகையில் எழுதப்பட்ட மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் கூகுள் லென்ஸ் உதவி செய்யும். இது AI தொழில் நுட்பம் மூலம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொழில்நுட்பம் சேவைக்கு வரும் போதுதான் இது குறித்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குறிப்பு உள்பட எந்த ஒரு மோசமான கையெழுத்தில் எழுதப்பட்ட ஆவணங்களாக இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் மூலம் கூகுள் லென்ஸ் மூலம் அதை எளிமைப் படுத்த முடியும். எனவே மிக எளிதில் புரியாத எழுத்துக்களை கூட நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அதே நேரத்தில் இதற்கான பணிகள் நிறைய உள்ளது என்றும் அந்த பணி முடிவடைந்ததும் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அதன் முழு விபரங்களை அறிந்து கொள்ளவும் கூகுள் லென்ஸ் பயன்படுத்தலாம் என்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் மூலம் இந்த வசதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






















