சினிமா செய்திகள்
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கோல்டன் குளோப் விருது? உலக அளவில் கெத்து காட்டும் இந்திய திரைப்படம்!
Published
2 months agoon
By
Shiva
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் பாலையா நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் இந்த படம் இந்திய திரையுலகின் பெருமைக்குரிய திரைப்படம் என்று போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது பெற இரண்டு பிரிவுகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து விருது கொடுத்து வரும் நிறுவனங்களில் ஒன்று கோல்டன் குளோப் விருது என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக இந்த விருது சர்வதேச விருதாக மதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், ஆங்கிலம் அல்லாத சிறந்த படம், சிறந்த பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆங்கில மொழி அல்லாத சிறந்த படம் என்ற பிரிவில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது என்பதும் அதேபோல் சிறந்த பாடல் என்ற பிரிவில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கோல்டன் குளோப் விருது ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு சிறந்த பாடல் அல்லது ஆங்கிலம் அல்லாத சிறந்த படம் என்ற விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ மற்றும் ஆலியா பட் நடித்த ’கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘ஷெல்லோ ஷோ’ உள்ளிட்ட படங்களும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ மட்டுமே கோல்டன் குளோப் விருதுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 10-ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு விருது கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
You may like
-
ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது.. உறுதி செய்த ராஜமவுளி!
-
வெற்றி என்பது ஹீரோக்களால் இல்லை: நிரூபித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ஆச்சார்யா’
-
அஜித், விஜய்யை இணைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு படம்: எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டம்?
-
புதையலை தேடும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
-
‘ஆர்.ஆர்.ஆர்’ வசூலை மிஞ்சியது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ஆச்சரிய தகவல்
-
’ஆர்.ஆர்.ஆர்’ இரண்டாம் பாகம் கண்டிப்பாக உண்டு: மீண்டும் ராம்சரண் தேஜா- ஜூனியர் என்.டி.ஆர் தான்!