சினிமா
ஹாலிவுட்டில் நுழையும் நடிகர் ராம்சரண்!

நடிகர் ராம்சரண் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதைத் தற்போது உறுதி செய்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான ராம்சரண் விரைவில் ஹாலிவுட் படங்களில் நடிக்க இருப்பதை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். ’ஆர்.ஆர்.ஆர்.’ படம் ஆஸ்கர் அளவுக்கு சென்றிருப்பதால் அந்தப் படத்தை இயக்குநர் இராஜமெளலி தீவிரமாக புரமோட் செய்து வருகிறார்.

Ram Charan
மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலும் ஆஸ்கர் 2023-ல் சிறந்த பாடலுக்கான கேட்டகரியில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது மேலும் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல ஊடகங்களுக்கு ராம்சரண் சமீபத்தில் பேட்டிக் கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டிகளின் மூலம் தான் ஹாலிவுட் படங்களில் விரைவில் நடிக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “ஆமாம்! நான் விரைவில் ஹாலிவுட் படங்களில் நடிக்க இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அது என்னமாதிரியான கதைக்களம், நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்பது போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பாருங்கள்’ என்பதையும் தெரிவித்து இருக்கிறார். மேலும், ஜூலீயா ராபர்ட்ஸ், டாம் குரூஸ் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கத் தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.