இந்தியா
அதானியின் சொத்துக்கள் தொடர் சரிவு எதிரொலி: கோடீஸ்வரர் பட்டியலில் முந்தினார் முகேஷ் அம்பானி..!

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவில் இருந்தன என்பதும் கடந்த வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இந்த வாரத்தின் மூன்று நாட்களிலும் அவருடைய நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததன் காரணமாக அவரது சொத்து மதிப்பும் சரிந்து கொண்டே வருகிறது.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கோடீஸ்வரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து அதானி, ஐந்தாவது இடம் ஏழாவது என இடம் என சரிந்து ஒரு கட்டத்தில் டாப் 10 இடங்களில் இருந்து அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் 15 வது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஒரு பக்கம் கௌதம் அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானி, கோடீஸ்வரர் பட்டியலில் அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளார். அவர் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானியின் தற்போதைய நிகர மதிப்பு 75.1 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய நாளின் 83.9 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பின்னுக்குத் தள்ளி 84.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்கார இந்தியராக ஆகியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 0.19 சதவிகிதம் உயர்ந்து 164 மில்லியன் டாலர்கள் உயர்ந்ததைத் தொடர்ந்து அம்பானி அதானியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் பிஎஸ்இயில் 3.02 சதவீதம் சரிந்து ரூ.2,880.20 ஆக இருந்தது. ஐந்து நாட்களில், பங்குகள் 15 சதவீதம் சரிந்தன. அதானி கிரீன் 3.82 சதவீதம் சரிந்து ஒவ்வொன்றும் ரூ.1,177.15 ஆக இருந்தது மற்றும் ஐந்து நாட்களில் பங்குகள் சுமார் 38 சதவீதம் சரிந்தன.