இந்தியா
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் அடுத்த கேள்வியை கேட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் அடுத்த கேள்வி என அவர் கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் நிதியமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களது கேள்விக்குப் பதில் அளிப்பது சம்பிரதாயம்.
அப்போது செய்தியாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்ற கேள்விகளை நிதியமைச்சர்களிடம் கேட்பார்கள்.
அப்படி புதன்கிழமை, 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், இது போதுமான பட்ஜெட் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளார்களே அதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டார்.
அதற்கு, “என்ன காரணங்களுக்காக?” என கேட்டுவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்று சென்றுவிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த செயல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு வீடியோ!
மேலும் படிக்க: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள் என்னென்ன? குறையும் பொருட்கள் என்னென்ன?