இந்தியா
10 வயதில் பலாத்காரம், 12 வயதில் பிச்சை, 18 வயதில் பாலியல் தொழில்.. இன்று சர்வதேச அழகு ராணி!
Published
4 weeks agoon
By
Shiva
10 வயதில் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை ஒருவர் இன்று சர்வதேச அழகுராணியாக தலைநிமிர்ந்து வலம் வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநங்கைகளின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது என்பதும், அவர்கள் இன்றளவும் குடும்பத்தாராலும் மற்றவர்களாலும் வெறுக்கப் பட்டு வருகிறார்கள் என்று தான் கூறப்பட்டு வருகிறது. ஒரு திருநங்கையை தனது வாழ்க்கையில் வெற்றி அடைவது என்பது எளிதானது அல்ல. கடுமையான உழைப்பு அவமானங்களை சந்திப்பது ஆகியவை இல்லாமல் அவர்களுடைய வெற்றி சாத்தியமில்லை.
அந்த வகையில் நாஸ் ஜோஷி என்பவர் பத்து வயதில் தான் திருநங்கை என்று அறியப்பட்டவுடன் குடும்பத்தாரால் விரட்டி அடிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தாய் மாமாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாய் மாமா மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்.
இதனையடுத்து அவர் மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து தனது உயிரை காப்பாற்றி வந்த நிலையில் அதன் பின்னர் 18 வயதில் பாலியல் தொழில் செய்து பாலின அறுவை சிகிச்சைக்கு பணம் சேர்த்தார். இந்த நிலையில் கடந்த 2021 – 22 ஆம் ஆண்டில் என்ற சர்வதேச அழகுராணி பட்டத்தை வென்றார். இன்று அவர் ஒரு சமுதாயத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து நாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘10 வயதில் குடும்பத்தாரால் விரட்டப்பட்ட பிறகு தாய்மாமன் மற்றும் அவரது நண்பர்களின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி அதன்பிறகு சாலையில் பிச்சை எடுத்ததாக கூறியுள்ளார். மசாஜ் பார்லர்களில் பணிபுரிந்து அதில் கிடைத்த பணத்தை அறுவை சிகிச்சைக்கு சேர்த்ததாகவும், மேலும் பணம் வேண்டும் என்பதற்காக பாலியல் தொழில் செய்ததாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து பாலியல் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றார். பின்னர் மாடலிங் தொழிலில் செய்த அவர் பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரின் தொடர்பு கிடைத்ததால், அவரது புகைப்படங்கள் நாடு முழுவதும் வைரலானது. குறிப்பாக ஒரு முன்னணி பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நாஸ் இடம் பெற்றதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்ற நாஸ், அதன்பிறகு அவர் மூன்று முறை திருநங்கைகளுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். இதுவரை அவர் 8 அழகிகள் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் சர்வதேச திருநங்கை அழகுராணி என்ற பட்டத்தை வென்ற நாஸ் அவர்களை இன்றே நாடே வாழ்த்து தெரிவித்து வருகிறது.
தனது குடும்பத்தாரால் விரட்டப்பட்ட நாஸ் தற்போது இரண்டு மகன்களின் தாயாக உள்ளார். ஆம், அவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும் தத்தெடுத்து வளர்த்து வரும் இருவருமே குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் என்றும் பேட்டி ஒன்றில் நாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பேட்டி அளித்த நாஸ், ‘நாட்டில் காதல் என்பது இலவசம் அல்ல என்றும் தான் ஒரு பையனை காதலித்ததாகவும் ஆனால் தான் திருநங்கை என்று தெரிந்ததால் தனது திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறினார். மேலும் திருநங்கைகள் இன்றளவும் இந்தியாவில் வெறுப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
You may like
-
அறுவை சிகிச்சை செய்து 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய முதலமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்!
-
விமானம் தாமதத்தால் மாற்று இதய அறுவை சிகிச்சையை மிஸ் செய்த நபர்.. கதறி அழுததால் பரபரப்பு!
-
39 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்: இடம் மாறிய கல்லீரல்
-
ஸ்டன்னிங் கவர்ச்சில் பிக்பாஸ் நமீதா மாரிமுத்து.. மிரளும் நெட்டிசன்கள்…
-
நமிதாவின் அரை மணி நேர கதையை அப்படியே ஒளிபரப்பிய விஜய் டிவி!
-
எங்களை யாரும் அப்படி பாக்காதீங்க: கதறி அழுத பிக்பாஸ் நமிதா!