Connect with us

இந்தியா

’வந்தே பாரத்’ ரயில்களை அடுத்து ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் அறிமுகம்.. என்னென்ன சிறப்புகள்?

Published

on

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்தே பாரத் என்ற அறையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக சென்னை முதல் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகளின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயிலில் வெறும் நான்கு மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது என்பதும் சமீபத்தில் கூட கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்கலை அடுத்து வந்தே மெட்ரோ என்ற புதிய ரயில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அனைத்து ரயில்களும் டீசல் இன்ஜின் மற்றும் மின்சாரத்தில் இயங்கிவரும் நிலையில் வந்தே மெட்ரோ ரயில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் நிலையில் அந்த பட்டியலில் விரைவில் இந்தியா இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறும்போது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வந்தே மெட்ரோ ரயில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த ரயில் தற்போது மாதிரி ரயில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஹரியானாவில் இந்த ரயில் சோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரயில் எந்தவித மாசு புகையும் வெளியேற்றாது என்றும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்த ரயில் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மனியில் முதல் முதலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்கிய போது மணிக்கு 140 கிலோமீட்டர் அந்த ரயில் செல்கிறது என்றும் ஒரே வேகத்தில் ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதல் முதலில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் சீனாவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது என்பதும் ஆசியாவில் இயங்கும் முதல் ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஓடும் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரே நேரத்தில் 600 கிலோ மீட்டர் வரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என்றும் அதற்கு வந்தே மெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களும் ஹைட்ரஜன் ரயில்களாக மாற்றப்படும் என்றும் இதனால் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மேம்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?