தொழில்நுட்பம்
பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ்.! இன்னும் அதிக சலுகை.!

பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது. அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம், அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை பிக் தீவாளி சேல்ஸ் என்ற இன்னொரு பிரமாண்டமான விழாக்கால சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
முன்பு நடத்தப்பட்ட சிறப்பு விற்பனை போல, இந்த தீபாவளி சிறப்பு விற்பனையிலும் ஏகப்பட்ட பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமாக ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 1 முதல் துவங்குகிறது, ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு கூடுதல் சிறப்பாக ஒரு நாள் முன்பே விற்பனையை துவங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம். இதன்படி அக்டோபர் 31 இரவு 9 மணி முதல் பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு விற்பனை துவங்குகிறது.
















