உலகம்
திவாலான சிலிக்கான் வேலி வங்கிக்கு புதிய தலைவர்.. தேறுமா?

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியின் நிதி ஆதாரங்கள் சொத்து ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் பெடரல் வங்கி கையில் எடுத்த நிலையில் தற்போது உயர்மட்ட நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற முடிவு செய்து புதிய தலைவரை நியமனம் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் வர்த்தக அமைப்பை மாற்றும் முதல் பணியாக சிலிக்கான் வேலை வங்கியின் சி.இ.ஓவாக Tim Mayopoulos என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆறு வருடங்களுக்கு சிலிக்கான் வங்கியின் சிஇஓ ஆக பதவியில் இருப்பார் என்றும் அவர் இந்த வங்கியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது .
சிலிக்கான் வேலி வங்கி திவால் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில் புதிய தலைவர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் பணத்தை இந்த வங்கியில் தான் டெபாசிட் செய்து வைத்திருந்தது என்பதும் இந்த வங்கி கையை விரித்துவிட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கலாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அரசு குறிப்பாக அதிபர் ஜோ பைடன் டெபாசிட்தாரர்களுக்கு அமெரிக்க அரசு பொறுப்பு என்றும் டெபாசிட் காரர்கள் அனைவருக்கும் தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளதால டெபசிட்தாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் வங்கி திவால் ஆகும் பட்சத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்து வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் பணம் மட்டுமே கிடைக்கும் என்பதும் அதன் மூலம் டெபாசிட் தொகையில் சுமார் 5% மட்டுமே டெபாசிட் கிடைக்கும் என்றும் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திவாலான சிலிக்கான் வேலி வங்கிக்கு நிதி வழங்குவதற்காக பெடரல் வங்கிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் பெடரல் வங்கிகள் அவசர காலங்களில் கொடுக்கும் கடன் மூலம் சிலிக்கான் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முழு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.