தமிழ்நாடு
சென்னை மெரீனாவில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட ஒருசில கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட ஒருசில கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை உள்பட ஒருசில கடற்கரை பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 முதல் 15 மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியதாகவும், அரை மணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புதுவை கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென சென்னையிலுள்ள மெரினா உட்பட ஒரு சில கடற்கரை கடல் உள்வாங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் சென்னையில் கடல் உள்வாங்கி உள்ளதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.











