இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.03.2026

- மத்திய கிழக்குப் போர் பதற்றம் குறித்து விவாதிக்க இன்றிரவு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மதுரையிலிருந்த புறப்பட்டு இன்றிரவு 9.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார் மோடி.
- காரைக்கால் திருநள்ளாறில் மார்ச் மாதம் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
- திமுக கூட்டணியில் இந்திய யுனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்கள் ஒதுக்கீடு
- ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான செயல் என வடகொரியா கடும் கண்டளம்.
- இந்திய அரசு இப்போது தனது குடிமக்களைப் பாதுகாக்கத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது: இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வான்வெளி திறக்கப்பட்டவுடன் இந்தியர்களை மீட்கும் பணி (Airlift) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உதவி எண்கள்: இந்தியத் தூதரகம் அவசர உதவிக்காகப் பின்வரும் மொபைல் எண்களை வெளியிட்டுள்ளது: +989128109115, +989128109109.




