Connect with us

இந்தியா

மத்திய கிழக்கில் வெறித்தனமான தாக்குதல்கள்…!

Published

on

மத்திய கிழக்குப் போர் இப்ப யாருமே கற்பனை செய்ய முடியாத ஒரு பேரழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கு! ‘அயர்ன் டோம்’ (Iron Dome) உடைக்கப்படவே முடியாது எண்று இஸ்ரேல் மார்தட்டின காலம் போய், இப்ப ஈரானோட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலோட மையப்பகுதியிலயே நேரடியா இறங்கத் தொடங்கி விட்டது.. இரு தரப்பும் மாறி மாறித் தொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வெறித்தனமான தாக்குதல்களால் உலகமே இப்ப அதிர்ந்து போயிருக்கு.

இஸ்ரேலோட வான் பாதுகாப்பையெல்லாம் அடிச்சு நொறுக்கிக்கொண்டு ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள்ள மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கு. ஹாருட்ஸ் (Haaretz) பத்திரிகையும், பிபிசி (BBC)-யும் இப்ப வெளியிட்டிருக்கிற செய்தியின்படி, இஸ்ரேலோட ஆகப்பெரிய நகரமான டெல் அவிவ் (Tel Aviv) மையப்பகுதியில ஈரானோட பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியா விழுந்து வெடிச்சிருக்கு.

இதுல குறைஞ்சது 40-க்கும் மேற்பட்ட பெரிய கட்டடங்கள் சின்னாபின்னமாகியிருக்கு! ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டதில, இஸ்ரேலியப் பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியாகியிருக்கார். இந்தப் போரில இஸ்ரேலுக்குள்ள நடந்த முதல் உயிரிழப்பு இதுதான்! கட்டட இடிபாடுகளை இப்ப புல்டோசர்கள் வைச்சு அவசர அவசரமா அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஹோட்டல்களில தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்ப இஸ்ரேல் முழுக்க அபாயச் சங்குகள் (Sirens) அலறி ஓய்ஞ்ச பாடியில்லை. ஈரானில இருந்து கொத்துக் கொத்தா ஏவுகணைகள் வந்துகொண்டே இருக்கு. இஸ்ரேலோட அயர்ன் டோம் சிஸ்டம் நிறைய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தினாலும், ஒரே நேரத்தில பல நூறு ஏவுகணைகள் வாறதால, வான் பாதுகாப்பை மீறி ஏவுகணைகள் உள்ளுக்க புகுந்து அழிவை ஏற்படுத்துது.

இந்த நிலைமையில, இஸ்ரேலிய ராணுவம் இப்ப வெளிப்படையாவே ஒரு பகீர் உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறதாம். . “எங்களுடைய வான் பாதுகாப்பு 100 சதவீதம் கிடையாது.. அதனால மக்கள் கட்டாயம் பதுங்கு குழிகளில தான் இருக்க வேண்டும்” என்று ராணுவம் எச்சரிச்சிருக்கு. இஸ்ரேலோட அசைக்க முடியாத வான் பாதுகாப்பை ஈரான் இப்ப உடைச்சு எறிஞ்சிட்டுது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை!

இஸ்ரேலிய விமானப்படை, அமெரிக்காவோட சேர்ந்து கடந்த 24 மணி நேரத்தில மட்டும் ஈரானுக்குள்ள 1,200-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியிருக்கிறதா மார்தட்டியிருக்கு.

இதுல ஆகப்பெரிய துயரம் என்னவென்றால், தெற்கு ஈரானில இருக்கிற ஹொர்மொஸ்கான் (Hormozgan) மாகாணத்தில உள்ள ‘மினாப்’ (Minab) நகரத்தில, சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மேல இஸ்ரேல் குண்டு வீசியிருக்கு! இந்த ஈவிரக்கமற்ற தாக்குதல்ல 148 பேருக்கும் மேல கொல்லப்பட்டிருக்கிறார்களாம்.. கணக்கில்லாத மக்கள் படுகாயமடைஞ்சிருக்கிறார்களாம்! இதைப் பாத்துக் கொதித்தெழுந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி, “டஜன் கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.. இதுக்கு நாங்க சும்மா விடமாட்டோம், கடுமையான பதிலடி கொடுப்போம்” என்று சபதமெடுத்திருக்கிறார்..

களத்தில் இறங்கிய டிரம்ப் – “வரலாறு காணாத அழிவு வரும்!”

ஈரான் எப்போ ‘மிகக் கடுமையான பதிலடி ‘ என்று அறிவிச்சதோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களத்தில இறங்கிட்டார்! தன்னோட Truth Social பக்கத்தில ஈரானுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை அவர் விட்டிருக்கார்.

“இன்னைக்கு ஈரான் மிகக் கடுமையாத் தாக்கப்போறதாச் சொல்லியிருக்கு.. அப்படி அவங்க செய்தா, இதுவரைக்கும் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் அழிவுப் படைய வைச்சு நாங்க ஈரானைத் தாக்குவோம்!” எண்டு டிரம்ப் நேரடியாச் சவால் விட்டிருக்கார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்9 minutes ago

PPF திட்டம்: 20 ஆண்டுகளில் ரூ.67 லட்சம் சேமிக்கலாம்! எப்படி வேலை செய்கிறது?

ஆன்மீகம்12 minutes ago

ஏப்ரல் 20 சனி–செவ்வாய் அபூர்வ சேர்க்கை: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்14 minutes ago

சனி மகாதிசை பலன்கள்: 19 ஆண்டுகள் வாழ்க்கையை மாற்றும் சனி – யாருக்கு யோகம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்17 minutes ago

40 வயதிற்கு பிறகு செல்வம் பெருகும் ராசிகள்: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கை மாற்றம் காண்பார்கள்!

வணிகம்22 minutes ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!

ஆன்மீகம்26 minutes ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: மேஷத்தில் நுழையும் செவ்வாய் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க முடியவில்லையா? இந்த தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? செல்வம் பெருக்கும் அதிர்ஷ்ட நாள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (19/04/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 19 ஏப்ரல் – 25 ஏப்ரல் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Martinstools | professional saas tools for everyone. Heavy equipment transport lubbock tx.