இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.02.2026

- தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவ ஆளுமை, கேபின் குழு பணியாளர் உள்ளிட்ட தொழில்முறை பயிற்சியளிக்கிறது தாட்கோ. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயது வரை உள்ளவர்கள் இந்த 3 மாத கால பயிற்சிக்கு தாட்கோ.காம் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.திருப்புரில் பயிற்சியளிக்கப்படும்.விடுதி உணவு தாட்கோ வழங்கும்.
- தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாளான இன்று அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
- ஜீன் 21 ம் நாள் 2021 ம் ஆண்டு தொடங்கிய 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. மொத்தம் 161 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது.
- பொது மயானத்தை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமை. கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளத போல இறந்தவர்களுக்கு கண்ணியத்துடன் இறுதிச்சடங்கு செய்வதும் உரிமை. – சென்னை உயர்நீதிமன்றம்.
- பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முழு ஒப்புதல் கொடுத்து விட்டோம். ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். – கோவையில் ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு.


