இந்தியா
செக் புக் வசதியுடன் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு

போஸ்ட் ஆபீசிலோ அல்லது வங்கியிலோ மைனர் சேமிப்புக் கணக்கு தொடங்க பெற்றோரின் ஆதார் மற்றும் மைனர் குழந்தையின் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே கணக்கு தொடங்கி கொடுக்கப்டும். ஆனால் அந்த கணக்குகளுக்கு செக்புக் வசதி கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் யுகோ வங்கி மைனர் கணக்குகளுக்கு செக்புக் வதியொடு தொடங்கி கொடுக்கிறது.
யுகோ வங்கி வாடிகை்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்புக் கணக்குகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றில் யுகோ ரைசிங் ஸ்டார் சேமிப்புக் கணக்கு 10 முதல் 18 வயதுக்கு குறைவான எழுதப் படிக்கத் தெரிந்த குழந்தைகள் தொடங்கும் வகையில் எளிமையான சேமிப்பு கணக்காகும்.
இந்த சேமிப்புக் கணக்குகளுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. குறைந்தபட்ச இருப்பாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச இருப்பாக ரூபாய் 10 லட்சமாக இருக்கும்.
மைனர் அக்கவுண்ட் என்ற பெயரில் முத்திரையிடப்பட்ட 25 செக்குகள் கொண்ட செக்புக் வழங்கப்படும். சராசரியாக ஆண்டுக்கு ஒரு செக்புக் இலவசமாக வழங்கப்படும்.
பிரத்யேக ரூபே கார்டு வழங்கப்படும். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை பணமாக எடுக்கலாம். ஆன்லைனில் 10 ஆயிரம் ரூபாய்ககு கொள்முதல் செய்யலாம்.
யுகோ ஏடிஏம்களில் மாதத்துக்கு 5 இலவச பரிவர்த்தனை பிற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும்.
வங்கிகளுக்குள் பரிமாற்றங்கள் ஐஎம்பிஎஸ், நெஃப்ட், யுபிஐ ஆகியவற்றுக்கு ஒரு நாளைக்கு பரிவர்த்தனை வரம்பு 10 ஆயிரம் ரூபாயாகும்.
மாதாந்திர வங்கி அறிக்கை இலவசம். இதன் பின்னர் பொருந்தக்கூடிய கட்டணங்கள் உண்டு.
ஆதார் சான்று, பிறப்பு சான்று, பாஸ்போர்ட், பான்கார்டு வழங்கி கணக்கு தொடங்கலாம்.
மைனர் கணக்கு என்பதால் விதிகளின்படி நியமன வசதி கிடைக்கும்.
இந்த கணக்கு வழியாக பெறக்கூடிய கல்விக் கடனுக்கு செயலாக்க கட்டணங்கள் இல்லை.
கணக்கு தொடங்கி 14 நாட்களுக்குள் மூடுவதற்கு பிடித்தம் இல்லை. ஆனால் 14 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்குள் கணக்கை மூடுவதற்கு 350 ருபாய் கட்டணம்.
காலாண்டுக்கு ஒரு முறை 150 ருபாய் பராமரிப்புக் கட்ணம் மற்றும் ஜிஎஸ்டி உண்டு.
மைனர் உரிய வயதை எட்டும்போது தனது கணக்கில் உள்ள இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். வயது முதிர்ச்சி அடையும் ஒரு மாதத்திற்கு முன்ப கணினியால் உருவாக்கப்பட்ட அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக மைனரின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடீ மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.














