இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.02.2026

- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மணிப்பூரி மொழி படமான “BOONG’ திரைப்படம் BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படப் பிரிவில் விருது வென்றது. இந்த பிரிவில் விருது பெற்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பதும் டிஸ்னி தயாரித்த Lilo & Stitch மற்றும் zOOTOPIA 2 படங்களை பின்னுக்குத் தள்ளி “பூங்“ விருது வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
- பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவ.
- உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலம்.
- சிவகங்கை அருகே கடந்த 2021ம் ஆண்டில் பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.









