Connect with us

இந்தியா

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

Published

on

பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்போவதாகக் கூறி கைத்தட்டல்களைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருப்பது தற்போது பேசுபொரளாகி வருகிறது.

2035ல் தங்கள் நாடுகளில் ஓடும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முழுத்தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆர்ப்பாட்டமாக அறிவித்தது.

சுற்றுச்சூழல் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நோக்கத்திலும் பெட்ரோலிய இறக்குமதியினால் ஏற்படும் நிதிச்சுமையிலிருந்து மீளவும் பல நாடுகளும் மின்சார வாகனங்களுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பைக் கொடுத்து வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இப்படி யுடர்ன் அடித்திருப்பதற்கு  என்ன காரணம்?

நம்பிக்கை அளித்த ஜாம்பவான்கள்

அமெரிக்காவில் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதன்மைத் தயாரிப்பு மின்சார வாகனங்களே என்று கூறி மும்முரமாக ஈடுபட்டது. ஆடி, போர்சே, ஸ்கோடா போன்ற வாகனங்களின் உற்பத்தி கேந்திரமான ஜெர்மனியைச் சேர்ந்த போகஸ்வேகன் நிறுவனம் 2030ல் ஐரோப்பாவில் தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களில் 75 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே இருக்கும் என்று அறிவித்தது.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டெர்லாண்டிஸ் நிறுவனம் வருங்காலத்தில் 100 சதவீதம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சாலைகளுக்கு அனுப்பப் போவதாக சத்தியமே செய்து கொடுத்தது.

அமெரிக்காவில் தற்போது விற்பனையாகும் வாகனங்களில் பத்தில் ஒரு பங்குதான் மின்சார வாகனங்களாக இருக்கிறது. எனினும் செவர்லே, ஜிஎம்ஸி, காடிலாக் போன்ற பிரபல பிராண்ட் கார்களை தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக இல்லையென்றாலும் 2035ல் முழுக்க மின்சார வாகனங்களுக்கு மாறிவிடப் போவதாக கூறியிருந்தது.

உறுதிமொழிகள் காற்றில் கரைந்தது ஏன்?

மின்சார வாகன உற்பத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்ட ஈடுபாடு முடிவுக்கு வந்து விட்டது போல் தெரிகிறது. பல முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கும் அவர் எலான் மஸ்கின் மீது கொண்ட திடீர் பகைமை காரணமாக அவரது டெஸ்லா நிறுவனத்தை குறி வைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களுக்கு அளித்த வரிவிலக்கு மானியம் போன்றவற்றை பெருமளவில் குறைத்துக் கொண்டார். இதனால் அமெரிக்காவில் மின் வாகனங்களில் முனைப்ப காட்டுவது இப்போதைக்கு கலிபோர்னியா போன்ற சில மாகாணங்கள்தான்.

இந்த நிலையில்தான் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் வருங்காலத்தில் முழுக்க முழுக்க பெட்ரோல் வாகனங்களுக்க தடை விதிப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை என்று கூறுகிறது. மாறாக பெட்ரோலிய வாகனங்களிலிருந்து வரும் நச்சுக்காற்றின் அளவைக் கணிசமாக  குறைக்க தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறிவருகிறது.

குறிப்பாக ஜெர்மனியும் இத்தாலியும் பெட்ரோலிய வாகனங்களுக்கு தடை என்பதை முதலிலிருந்தே முழு மனதோடு ஏற்கவில்லை.

பாதிப்புகள்

மூச்சு முட்டும் நச்சுப் புகை காரணமாகடெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மோலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டு புதிய விதி அறிமகமானது. தெருக்களின் தூசியைக் கட்டுப்படுத்த கட்டிடப் பணிகளுக்க கடும் கட்டுப்பாடுகள் பொண்டு வரப்பட்டன. ஆனால் இவையெல்லாம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

இந்த வாகன புகையிலிருந்து கரியமிலவாயு மற்றும் நைட்சிக் ஆக்சைடு ஆகியவை அதிகரிக்கும். குறிப்பாக பிஎம் 2.5 அளவுக்கு தூசு துகள்கள் அதிகரிப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும். 2.5 மைக்ரோமீட்டரை விடக் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் அதிகரிப்பது நேரடியாக நுரையீரலை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை நம உடலில் ஆஸ்துமா,இதய பாதிப்பு ரத்தச் சர்க்கரை மோசமான அளவைத்தாண்டுதல் போன்ற ஆபத்துக்களை உண்டாக்கலாம்.

சார்ஜிங் ஸ்டேஷன்கள் பரவலாக இல்லாதாதால் மின்சார வாகனங்களின் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு வேகமடையவில்லை.

சீன சவால்

சீனாவில் விலை குறைந்த மின்சார வாகனங்களும்  பிற வாகனங்களும் தயார்க்கப்படுவதால் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே லித்தியம், சோடியம் அயான் பாட்டரிகளைதயாரிப்பதில் சீனா முன்னணியில் இருப்பதையம் மனதில் கொள்ள வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை இந்த விஷயத்தில் வாக்கு தவறியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அவநம்பிகையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்ட பிரிடடன் மட்டும் 2030ல் பெட்ரோல் டீசலில் ஓடும் எந்த காரும் புதிதாக விற்பனை செய்யப்படாது என்று கூறியிருப்பது ஒரு சிறு ஆறுதல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.