இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.02.2026

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் முழுமையாக முடிந்து விட்படியால் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் திருமதி.அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
லிங்க் கீழே்்்்
https://www.erolls.tn.gov.in/…/SIR_FINALROLL_23022026.aspx
www.erolls.tn.gov.in
தமிழ்நாட்டில் 2025ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இப்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதில் ஒன்று வடசென்னையின் பெரம்புர் தொகுதி. இன்னொன்று இன்னும் முடிவாகவில்லை.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி https://fmg.tnmedicalonline.co.in//MyCourse.aspx
முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.-தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.
சண்டிகர் ஐடிஎப்சி வங்கி கிளையில் பணியாற்றும் சில அதிகாரிகள் அரியானா அரசாங்க கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை மோசடி செய்துள்ளனர்.
2035 ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்குமாம். பொருளாதார வல்லுநர்கள் கருத்து. – கேட்கவே நல்லா இருக்குல்ல….
27எம்எல்ஏ ஒரு ராஜ்யசபா காங்கிரஸ் திமுக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
16 வயதுக்கட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவது எதிர்மறையான வழிகளில் பாதிக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கர்நாடக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயருடன் சாதி பெயரைச் சேர்க்கக் கூடாது. கோயில் என்பது எல்லோருக்கும் பொதுவான இடம். அங்கே எந்த வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது. – சென்னை உயர்நீதிமன்றம்.












