Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.02.2026

Published

on

  1. டெல்லி பிாதமர் அலுவலகம் ஒட்டியுள்ள 3 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 குடும்பங்களை வரும் மார்ச் 6ம் தேதிக்குள் காலி செய்ய ஒன்றிய அரசு நோட்டீஸ். – சுமார் 45 கி.மீக்கு அப்பால் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் காலி செய்யவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
  2. மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தலுக்கு  பின் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து சுமார் 90 லட்சம் பெண்கள் நீக்கம். – 2024 தேர்தலுக்கு பின் 2.4 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை 2025 டிசம்பரில் 1.57 கோடியாக குறைப்பு. தீவிர சரிபார்ப்பு பணி, கேஒய்சி குளறுபடி எனக் கூறி எண்ணிக்கையை குறைத்து வருகிறது மராட்டிய பாஜக அரசு.
  3. வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லும் தவெகவில் இணைந்த வாரிசுகள் – முன்னால் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் மற்றும் தலித் எழில்மலையின் இளைய மகள் எழில் கேத்தரின் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
  4. எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்யபெறு விடுப்பு வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒப்புதல்
  5. தஞ்சாவுர் கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி புதேவி உடனுறை அத்திவரதரை 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மார்ச் 1 முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
pifteau henri, biolinker.