வீடியோ
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக வேகமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் திரைப்படம் ஈஸ்வரன்.
இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, தமன் இசை அமைக்கிறார். 30 நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியாகி, ரசிகர்களிடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் மோஷன் போஸ்டரில், ஈஸ்வரனின் தாண்டவப் பொங்கல் திரையரங்கத்தில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் திரை அரங்கில் தான் வெளியாகும் என்பதையும் தெளிவாகப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.