வீடியோ
ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப்போற்று. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், கோவிட்-19 காரணமாகத் தள்ளிப்போனது.
பின்னர் அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் சில காரணங்களுக்காகத் தள்ளிப்போய், இப்போது தீபாவளி சிறப்புத் திரைப்படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு ரூபாய்க்கு விமானச் சேவை வழங்கிய, ஏர் டெக்கன் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான், சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை.
இந்நிலையில் இன்று சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியாகி, ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.