தமிழ்நாடு
அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமியின் அனல் பறக்கும் பிரச்சாரம் ஆரம்பம்

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி சூளுரை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் அதிமுகவிற்காக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மார்கழி சனியன்று பெருமாளை வணங்கி விட்டு தாய் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘தமிழகத்தை அதிமுக அரசு 43 ஆண்டுகள் ஆண்டுள்ளது. பல சோதனைகளைத் தாண்டி சாதனைகளை புரிந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
அதே போல் நெல்கொள் முதலிலும் சாதனை படைத்துள்ளது. இன்றைக்கு மின்வெட்டு என்று பேச்சுக்கே இடமில்லை. மின்உபரி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
தற்போது திமுக தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கூட அதிமுகவை வீழ்த்த முடியாது. இடைப்பாடி என்பது அதிமுகவின் எஃகு கோட்டை. இங்கு ஒரு முறை கூட திமுக வெற்றி பெற்றதில்லை, வெற்றி பெறவும் முடியாது’. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.


















