தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாது… அண்ணாமலைக்காக வெயிட்டிங்… திமுக கடும் தாக்கு!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நினைக்கிறோம் என தெரிவித்தார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாதுனு நினைக்கிறேன் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக-பாஜக கூட்டணியில் மத்தியில் உள்ளவர்கள் தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மாநிலத்தில் இருக்கிறவர்கள் என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நினைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதற்கு திமுக தரப்பு தற்போது பதிலடி கொடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாதுனு நினைக்கிறேன், நாங்களே ஆட்சியைக் கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றார்.
மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய டிகேஎஸ் இளங்கோவன், ஈபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சொத்துப்பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும், அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.






