தமிழ்நாடு
மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு விசிக திருமாவளவன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் திருமா தனது வாழ்த்தில் கொஞ்ச எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. அதாவது ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்ததும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு விசிக திருமாவளவன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு வாழ்த்துக்கள் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்தில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் திருமா தனது வாழ்த்தில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என வரும் போது பாஜக ஈபிஎஸ்-யை தேர்ந்தெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். அதிமுக விவகாரத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என்பதை மறுக்க முடியாது. பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுக மற்றும் தமிழகத்திற்கு நல்லதல்ல.
ஈபிஎஸ் தமிழகத்தின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்., என்று கூறியுள்ளார்.