சினிமா செய்திகள்
அடல்ட் பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு கே.பாலசந்தர் பட டைட்டில்!

ஹர ஹர மகாதேவி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, போன்ற அடல்ட் திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார். இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது தெரிந்ததுதே.
இந்த நிலையில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கும் அடுத்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ’பொய்க்கால் குதிரை’ என்ற என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆபாச படங்களை இயக்கி வந்த இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இந்த படத்தை ஆபாசம் இல்லாமல் த்ரில் கதை அம்சத்துடன் இயக்க முடிவு செய்துள்ளார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்த தெரியவருகிறது.
Thank u God! Here’s the FirstLook of my next movie #PoikkalKuthirai featuring @PDdancing!@varusarath5 @immancomposer@raizawilson @prakashraaj @thondankani @vinod_offl @ministudiosllp @johnkokken1 @ballu_1987 @darkroompic @madhankarky @proyuvraaj pic.twitter.com/yehKSvBoHM
— Santhosh P Jayakumar (@santhoshpj21) August 4, 2021