சினிமா செய்திகள்
நடிப்பில் மிரட்டப்போவது நயன்தாராவா? தமன்னாவா?

உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குநர் சக்ரி டொலட்டி தமிழில் நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற பெயரிலும், அதே படத்தை ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவாவை வைத்து காமோஷி என்ற பெயரிலும் இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் வரும் மே 31ம் தேதி ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் தமன்னா பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த காம்பினேஷனை பாலிவுட்டுக்கு சக்ரி டொலட்டி பயன்படுத்தியுள்ளார்.
இரண்டும் ஒதே கதை என்பதால், நயன்தாராவின் நடிப்பா, தமன்னாவின் நடிப்பா எது மிரட்டப் போகிறது என்ற போட்டியும் ஆரம்பித்துள்ளது.
இந்த படத்திற்கான விழாவில் தான் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அவதூறாக பேசி பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








