சினிமா செய்திகள்
‘சிரிக்கும் ரோஜாவுக்கான சைக்கோ ராஜா’- மிரட்டும் பிரபுதேவாவின் ‘பஹிரா’ டீசர்

நடனப் புயல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படம் ‘பஹிரா’. அதன் மிரட்டும் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், பஹிரா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.
பிரபுதேவா முதன்முறையாக பல வித்தியாச கெட்டப்புகளுடன் நடித்திருக்கும் பஹிராவின் ஒவ்வொரு காட்சியும் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்குப் பரபரப்பைக் கூட்டுகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
????????HARD HITTING and ????‼️HIGHLY IMPACTFUL #BagheeraTeaser♣️???????? launched by Busiest #Dhanush????????..
An Out & Out Unique????️???? film by #PrabhuDeva???????? with 6 Heroines #AmyraDastur, #RamyaNambeesan, #JananiIyer, #SanchitaShetty & #Gayathrie????➕????.
Watch it????, https://t.co/u6evEMguXV pic.twitter.com/K3um2HhJ9q
— Kollywood Now (@kollywoodnow) February 19, 2021
அவர் அதைத் தொடர்ந்து எடுத்த ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படம் ஃப்ளாப் ஆன நிலையில், தற்போது அடுத்தப் படத்துடன் கம்-பேக் கொடுத்துள்ளார்.
பரதன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்தப் படத்துக்கு கணேசன் சேகர் இசையமைத்து உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அமிரா தஸ்தர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாசர் மற்றும் சாய் குமாருக்குப் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டு உள்ளன.
படத்தின் மிரட்சியளிக்கும் டீசர்:-