இந்தியா
கூகுள்-ஜியோ போன் எப்போது அறிமுகம், என்ன விலை? சுந்தர் பிச்சை தகவல்

கூகுள் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது என்பதும் அந்த போன் விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போன் வெளியாகும் தேதி மற்றும் விலை குறித்த தகவலை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட்போனில் பெயர் ’ஜியோ போன் நெக்ஸ்ட்’ என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு போன் என்றும் இந்த போன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியாக திட்டமிட்டு இருந்த நிலையில் ஒரு சில தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்திய மக்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டதாகவும் சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாற வேண்டும் என்பதற்காகவே இந்த போன் உருவாக்கப்பட்டதாகவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்து இருந்தார்
அதேபோல் முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்களுக்கு தேவையான வாய்ஸ் அசிஸ்டன்ட், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் இருப்பதாக ஏற்கனவே ஜியோ நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுந்தர் பிச்சை என்று அளித்த பேட்டியில் ’ஜியோ போன் நெக்ஸ்ட்’ வரும் தீபாவளி அன்று விற்பனைக்கு வர இருப்பதாகவும் இந்த போனின் விலை ரூ.3,499 என்றும் கூறியுள்ளார். மிக குறைந்த விலையில் கூடுதல் அம்சங்களுடன் கூடிய இந்த போன் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ போன் நெக்ஸ்டில் உள்ள சிறப்பம்சங்கள்:
5.5″ HD+ எல்சிடி டிஸ்ப்ளே
720×1440 பிக்சல்ஸ்
SD 215
13MP பின்கேமிரா
8MP செல்பி கேமிரா
2500mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 11 G
வாய்ஸ் அசிஸ்டெண்ட்
ஜியோ மற்றும் கூகுள் செயலிகள்
2/3GB ரேம்
16/32GB ரோம்














