சினிமா செய்திகள்
தோனி, நயன்தாரா, ரஜினி உதவியாளர்: எல்லாமே பொய்யா?

தோனி தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து தோனியின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் இந்த தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அந்த திரைப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தோனியின் நிறுவனத்தில் ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் மேனேஜர் என்றும் அந்நிறுவனம் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்றும் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


















