சினிமா செய்திகள்
நூறுகோடி கிளப்பில் இணைந்த தனுஷின் ‘வாத்தி’!

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன், கென் கருணாஸ் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17 அன்று வெளியானது.

தனுஷ் – சம்யுக்தா
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்தப் படம் வெளியானது. தமிழ்-தெலுங்கு என பைலிங்குவலாக வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெளியான ஒரே வாரத்தில் 75கோடி ரூபாய் வசூலித்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
தற்போது வெளியாகி பத்து நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை அடுத்து நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படமும் தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
‘வாத்தி’ படத்தை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து அவர் இயக்கத்தில் குறிப்பாக தனது 50வது படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.