சினிமா செய்திகள்
‘பொன்னியின் செல்வன்2’ படத்தில் பாடி இருக்கிறாரா சித்ரா?

பின்னணிப் பாடகி சித்ரா ‘பொன்னியின் செல்வன்2’ படத்தில் பாடி இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஐஷ்வர்யாராய் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.
படம் வசூல் ரீதியாகாவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக இருப்பதைப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது.
விரைவில் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. முதல் படத்திற்கு ஆதரவு கொடுத்தது போலவே, இரண்டாம் பாகத்திற்கும் பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கும் என படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பின்னணிப் பாடகி சித்ரா பாடல் பாடி இருப்பதாகத் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித்ரா பாடி மீண்டும் ஒருமுறை கேட்க தங்கள் உற்சாகத்தினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.