சினிமா செய்திகள்
‘சூர்யா 42’-க்கு பிறகு தெலுங்கில் கவனம் செலுத்தும் சூர்யா?

‘சூர்யா 42’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது தன்னுடைய 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் சூர்யா நடித்து வருகிறார். பதிமூன்று மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ப்ரீ பிசினஸ் 500 கோடியை கடந்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘சூர்யா 42’ படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘சூர்யா 42’-க்கு பிறகு நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆன ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்க உள்ளார். முதலில் இந்தக் கதை, நடிகர்கள் ராம் சரண் மற்றும் நானிக்கு சொல்லி இருக்கிறார்கள்.
அவர்கள் டேட் கிடைக்காததன் காரணமாக சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. விரைவில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.