சினிமா செய்திகள்
தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா: கேஜிஎப் 2 புகழ்ச்சிக்கு இயக்குனர் பதிலடி

கன்னட திரையுலகில் கேஜிஎப் என்ற ஒரே ஒரு நல்ல படம் வந்து விட்டதை அடுத்து அந்த படத்தை வேண்டுமென்றே தமிழில் உள்ள சில திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டியும் தமிழ் சினிமாவை மட்டந்தட்டி பேசியும் வருகின்றனர்.
தமிழில் இதற்கு முன் நல்ல படமே வந்ததேயில்லை போல், கன்னடம் மற்றும் தெலுங்கில் தான் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் போல் அவர்களுடைய பேச்சு இருக்கிறது
இதற்கு சில தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில் தமிழ் திரைப்படங்களே நன்றாகத்தான் இருக்கின்றது என்றும், போதும் இந்த ஒப்பீடு எனவும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சிவி குமார் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஓரு முள்ளும் மலரும் , கல்யாண பரிசு, காதலிக்கநேரமில்லை , recently ஆடுகளம் , சூதுகவ்வும் , முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை , ஜிகர்தண்டா , இன்று நேற்று நாளை , மெட்ராஸ் , ககபோ,தீரன் அதிகாரம் ஒன்று , இறுதிசுற்று , வடசென்னை , ராட்சாசன் , அசுரன் , பரியேறும் பெருமாள் , கைதி சார்பேட்டா பரம்பரை , ஜெய்பீம் , டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா’ என்று இயக்குனர் சிவி குமார் பதிவு செய்துள்ளார்.