சினிமா செய்திகள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ செம ஜாலியான டீசர்!

விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணியில் உருவான ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதை அடுத்து அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் செம ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு காதலிகள் வைத்திருக்கும் ஹீரோக்கள் திரைப்படம் தமிழில் பல வந்துள்ளன. ஆனால் இரண்டு காதலிகளையும் வெவ்வேறு இடங்களில் காதலித்து வெவ்வேறு இடங்களில் காதலை கூறும் காட்சிகள் தான் இதுவரை வந்து உள்ளது.
ஆனால் இந்த படத்தில் இரண்டு காதலிகளிடம் ஒரே நேரத்தில் காதலை சொல்லும் விஜய் சேதுபதி கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த படம் செம ஜாலியாக காமெடி மற்றும் ரொமான்ஸ் உடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.