சினிமா செய்திகள்
சிங்கம்-நரி கதை சொல்லும் விஷ்ணு விஷால்: ‘மோகன்தாஸ்’ டீசர்

விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி என இரண்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் .
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்த அடுத்த திரைப்படமான ‘மோகன்தாஸ்’ படமும் அனேகமாக அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘மோகன்தாஸ்’ படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
இந்த டீசரில் அடுத்தடுத்து தொடர் கொலை செய்யும் விஷ்ணு விஷால் சிங்கம் நரி கதையைக் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலைகாரனாக மோகன் விஷ்ணு விஷால் நடித்து உள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள நிலையில் பிருத்விராஜ் சுகுமாரன், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். முரளி கார்த்தி இயக்கத்தில் சுந்தரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள படம் விஷ்ணு விஷால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.