இந்தியா
கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா?

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறியிருப்பதை தற்போது பார்ப்போம்.
தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறுகிய காலத்தில் 32 முறை உருமாறி இருப்பதாகவும் மனித குலத்திற்கு இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் கூடிய விரைவில் பரவும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போதைக்கு 32 முறை ஒமிக்ரான் உருமாறி இருந்தாலும் அதனை முழுவதுமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் ஒமிக்ரான் பரவும் வேகம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த வைரஸை கோவாக்சின், கோவிஷீல்ட் கட்டுப்படுத்துமா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







