தமிழ்நாடு
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 16,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நீதிமன்றமும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற விட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது மட்டுமின்றி கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியானபடி பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தடை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















