தமிழ்நாடு
இதைத்தான் நான் நேற்று சொன்னேன், எல்லாரும் திட்டினிங்க: குஷ்பு டுவிட்!

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று நேற்று நான் கூறியபோது என்னை அனைவரும் குறிப்பாக திமுகவினர் திட்டினார்கள். ஆனால் இப்போது அவர்களும் அதையே தான் கூறுகிறார்கள் என்று குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் திறக்க அனுமதிக்கலாமா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறியதை அடுத்து அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பால் இதுகுறித்த தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து குஷ்பு தனது டுவிட்டரில் கூறியபோது ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என நான் நேற்று கூறியபோது திமுகவினர் உள்பட அனைவரும் என்னை திட்டினார்கள். ஆனால் இன்று கனிமொழி அதையே கூறியபோது வைகோ உள்பட அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
When I raised my voice n said #SterliteCopper should be opened up "JUST" to produce oxygen during these trying times, I saw hoardes of #DMK fools jumping in to tear me. Now what after #Kanimozhi has said the same, including #Vaiko ? So do the best, shut up n mind your business.
— KhushbuSundar (@khushsundar) April 26, 2021























