உலகம்
சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்தவர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
Published
1 month agoon
By
Shiva
சிக்கன் டிக்கா மசாலா என்ற உணவை தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சுவையான உணவை முதன் முதலில் கண்டுபிடித்த சமையல் கலை வல்லுநர் ஒருவர் நேற்று காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1964ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர் அல்லாஸ். இவர் தனது குடும்பத்துடன் ஸ்காட்லாந்து நாட்டில் சிறு வயதிலேயே ஸ்காட்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு உணவகத்தில் வேலை பார்த்து அவர் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கலை வல்லுநர் ஆக மாறினார்.
அவரது விருப்பமான உணவு சிக்கன் என்பதால் சிக்கனில் விதவிதமான உணவுகளை அவர் செய்து தனது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தினார். அந்த வகையில் ஒரு நாள் அவர் சிக்கனை ஒரு வாடிக்கையாளருக்கு பரிமாறிய போது அவர் இந்த சிக்கன் மிகவும் உலர்ந்ததாக காணப்படுகிறது, எனவே இதில் கொஞ்சம் தக்காளி சாஸ் எடுத்துக் கொள்கிறேன் என்று அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கு சிக்கன் டிக்கா என்ற உணவை கண்டுபிடிக்கும் ஐடியா வந்தது.
சிக்கனுடன் சாஸ் சேர்த்து தயிரையும் மற்றும் சில மசாலா பொருட்கள் அடங்கிய ஒரு உணவை கண்டுபிடித்தார். இந்த உணவு தான் தற்போது பிரிட்டனில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சிக்கன் டிக்கா மசாலா என பிரபலமாகி வருகிறது. அதுமட்டுமின்றி பிரிட்டிஷின் தேசிய உணவாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் டிக்கா மசாலா இன்று இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் விருப்ப உணவாக மாறி உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த அலி அக்பர் நேற்று காலமானதாக அவரது மருமகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த அலி அக்பருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.