உலகம்
தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல பாடகி: குவியும் கண்டனங்கள்!

பிரபல பாடகி ஒருவர் தனக்கு தானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல பாடகி Jane Zhang Liangyin. 35 வயதான இவர் சீனாவில் உள்ள பல மேடைகளில் பாடி உள்ளார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவரது சமூக வலைத்தளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நான் கொரோனாவுக்கு தயாராகி வருகிறேன் என்று முதலில் எனக்கு காய்ச்சல் வந்தது அதன் பிறகு தொண்டை வலிக்க ஆரம்பித்தது, உடல் முழுவதும் வலிக்க ஆரம்பித்தது என்று தெரிவித்திருந்தார். அதன்பின் மறுநாள் தான் தூங்கி எழுந்த பிறகு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டது என்றும் தான் எந்த மருந்தையும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்தவில்லை என்றும் நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொண்டேன் என்றும் எழுதியிருந்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஒரு பொறுப்பில்லாத செயலை செய்த பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு சில விஷயங்களை நான் கருத்தில் கொள்ளாமல் பதிவு செய்து விட்டேன் என்றும் அதற்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சீனாவின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
னாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த சில நாட்களில் மட்டும் அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிர்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.