தமிழ்நாடு
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பில் புகார் அளித்துள்ளது என்பதும் இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக கூறிய ஐந்து தொகுதிகளில் ஒன்றான திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் திடீரென திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? அல்லது ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.























