தமிழ்நாடு
பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம்… திடீர் பல்டி!!

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்புக் கருத்தைக் கூறினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாஜக, ‘எங்கள் தோல்விக்கு நீங்கள் தான் காரணம்’ என்று கூறியது.
இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘அதிமுக – பாஜக கூட்டணி தொடர்வதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’ என விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் சி.வி.சண்முகம், ‘நான் சொன்னது என்னுடைய சொந்தக் கருத்து. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இது குறித்து என்னிடம் கேட்டார். அது உங்கள் சொந்தக் கருத்தா எனக் கேட்டார். ஆமாம், அது என் சொந்தக் கருத்து தான் என்று அவரிடமும் விளக்கம் கொடுத்துள்ளேன்.
எங்கள் கட்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுவோம், விவாதிப்போம். தனிப்பட்ட கருத்தையும் தெரிவிப்போம். ஆனால், கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு ஏற்றபடி தான் நாங்கள் செயல்படுவோம். நான் சொன்னதைப் போல பாஜகவும் அவர்களுடைய கருத்தைத் தெரிவித்து உள்ளார்கள். அவ்வளவு தான்’










