இந்தியா
ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்!

ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கிய தொழிலதிபர் குறித்த செய்தி வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே ஒரு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் இந்தியாவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்பட பல பொருள்களை உலக நாடுகள் கொடுத்து உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களும் அரசு மருத்துவமனைக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். ஏற்கனவே டாடா, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பல்வேறு உதவிகளை செய்து நிலையில் தற்போது ஒரு தொழிலதிபர் ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி உள்ளார்.
ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.85 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை வழங்கிய தொழிலதிபர் பியாரே கான் என்பவர். இவர் ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். அந்த ஆக்சிஜன் மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு சென்று அடைந்து அங்கு உள்ள நோயாளிகளை காப்பாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














