இந்தியா
இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? சென்னையிலும் ஊரடங்கா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இதனை அடுத்து அவர் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அடுத்த சில வாரங்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சகம் சார்பில் ஊரடங்கு நிலவரத்தை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர்மட்ட குழு அளித்த பரிந்துரையின்படி 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.













